வலிமையே தமிழனின் வாழ்வு!

January 02, 2017

 ' நான் பெரிது நீபெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்கு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே ! எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது. "    - தமிழீழத் தேசியத்தலைவர் சிந்தனையிலிருந்து 

 அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு எமது புரட்சிகரமான புதுவருட வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். 'கடந்து போனவைகளில் ஒவ்வொன்றும் நேற்றே இறந்துவிட்டது. எதிர்காலத்தில் ஒவ்வொன்றும் இன்றே பிறந்து விட்டது."

 கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எமக்கென்ற தனியரசும் அதன் நிர்வாகத்திறனும் தமிழீழ தனியரசில் தமிழீழ மக்கள் கொண்ட உறுதிப்பாட்டையும் அதற்காக அவர்கள் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கின்ற உயிர்க் கொடையை சர்வதேசம் எண்ணிப்பார்க்கவைத்த அதேவேளை, உலகநாடுகள் தத்தமது நாடுகளின் இலாபங்களுக்காக மட்டுமே இயக்கப் படுகின்றது என்ற எமது தேசியத்தலைவரின் உரைகளிலும், பேச்சுகளிலும் சொல்வதற்கு அமையவே 2009 இல் எமது மக்களுடைய வீரம் செறிந்த உயிர் அர்பணிப்புக்கொண்ட ஆயுதப் போராட்டம் அமைதியாக்கப் பட்டிருந்தாலும், 2009 இல் இருந்து நீறுபூத்த நெருப்பாக இருந்த எமது மக்களின் உறுதியும், நம்பிக்கையும், மனவெளிப்பாடுகளுமே எழுவருடங்களின் பின்  செப்ரெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட எழுகதமிழ் எழுச்சி நிகழ்வும், நவம்பர் மாத மாவீரர்களின் நினைவு கூரலும், மட்டுநகரில் நடைபெறப்போகும் எழுகதமிழ் நிகழ்வுமாகும். 

 தமிழ் மக்களின் உயிர்ப்பு தமிழீழ தாயகத்திலேயே இருக்கின்றதையும், இராணு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எமது மக்கள் தமது வாழ்வாக வரித்துக்கொண்ட வரிப்புலிக்கோடுகளின் இலட்சியத்தில் எவ்வளவு பற்றுதியுடன் இருக்கின்றார்கள் என்பதையே  இவைகள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. அதற்கு இன்னு மின்னும் பலம்சேர்க்க வேண்டிய வரலாற்றுப்பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் எல்லோருக்கும் உண்டு. இதனை பொதுவான நேர்த்தியான பாதையில் எம்தேசியத்தலைவன் கொண்ட கொள்கையில் கிஞ்சித்தும் பிறளாது நாம் அனைவரும் செல்லவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எமது விடுதலை போராட்ட பாதையில் ஏற்பட்ட வேண்டாத கசப்பான உள்ஊடுருவல்களால் ஏற்பட்ட இழப்புகளும் கசப்பான நிகழ்வுகளும், அதற்கு காரணமானவர்கள் காறியுமுளும் நிலைக்குள் சென்று கொண்டிருப்பதையும் நம் கண்முன்னாலேயே காண்கின்ற நிலையில், தமிழீழ தேசமீட்பிற்காக நாளும் பொழுதும் தேசியத்தலைவனின் வழிகாட்டலில் அவரின் சுட்டும் விரலால் சுட்டிக்காட்டிய திசையில் சென்று சமராடி வெற்றிவாகை சூடி விழிநிமிர்த்த வைத்த எம் வீரர்களும், போராளிகளும், அதே தேசியத்தலைவர் சுட்டிக்காட்டி உருவாக்கிய புலத்துக்கட்டமைப்புக்களே  இன்றுவரை பல இழப்புக்களைச் சந்தித்து உறுதியோடு ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து இயங்குகின்றது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று எண்ணுகின்றோம்.

 தேசியத்தின் எதிர்காலத்தேவைகளுக்கும், இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கும் பல்வேறு செயற்பாடுகள் எம் கண்முன்னே நிறைந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. புலத்திலே தாயகத்தை நோக்கிய அரசியல். சனநாயக மனிநேய செயற்பாடுகளைச் இன்னும் வீரியமாக்கிச் செய்வதற்கும் அதில் எமது மக்களை பங்களிக்க வைத்து எமது நியாயமான கோரிக்கைகளுக்கு நாம் வாழும் நாடுகளின் ஆதரவையும் பக்கபலத்தையும் எம்தேசம் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்கானதொரு சந்தர்ப்பம் இந்த ஆண்டு நடைபெறப்போகும் பிரான்சு நாட்டின் அதிபருக்கான தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் காத்திரமான பங்கை வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம். எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எமக்கான ஆதரவையும் நேரடிப்பங்களிப்பையும் கோருவோம்.

அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

எமது இலக்கை அடைவதற்கும் எம் மாவீரர்களினதும், மக்களதும் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து தமிழீழ தேசத்திற்கும், எம் மக்களுக்கும் எங்கள் மனிதநேயமிக்க தார்மீகக் கடமையை தொடர்ந்து இப்புதிய ஆண்டிலே செய்வோம். எங்களின் எழுச்சியும், உணர்சியுமே எல்லோருக்கும் ஓர் தொடர் உந்து சக்தியாக இருக்கட்டும்.

 வலிமையே தமிழனின் வாழ்வு என்பதை புரிந்து கொண்ட சிங்களப் பேரினவாதிகளும் அதற்கு துணைபோகின்றவர்களும், அதற்கு பல்வேறு வழிகளில் திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேராவிடாது எமது வலிமையை மழுங்கடிக்கவே முயல்கின்றனர். அதற்கு எவரும் துணைபோகாது நம்பியிருக்கின்ற எமது மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக தொடர்ந்தும் இருப்பதோடு 'கடந்து போனவைகளில் ஒவ்வொன்றும் நேற்றே இறந்து விட்டது. எதிர்காலத்தில் ஒவ்வொன்றும் இன்றே பிறந்து விட்டது" என்று எண்ணுவோம். 

 ஒரு  சின்னச்செடிகூட தாய் மண்ணோடு எடுத்து வைத்தால்தான் அது வளர்கின்றது. இல்லையென்றால் அது மறுக்கின்றது, கருகுகின்றது வாடிப்போகின்றது அதுபோலவே எமது இளைய சந்ததியினருமாகும். 

இன்று ஓர் உயர்ந்த நிலையை நோக்கி தமிழினத்திற்கு பெருமையை தருகின்ற உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் அவர்களை, தாய்நாட்டில் பற்றுக் கொண்டவர்களாகவும், தாய்மண்ணை நோக்கியும், அவர்களின் வாழ்விடமொழியும், வல்லமையும் மண்ணுக்குத் தேவையென்பதை பெற்றோர்களும், இனவிரும்பிகளும் புரிந்துணர்வுடன் அவர்களுக்கு உணர்த்தி,  பின்பலமாக நின்று உத்வேகமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். 

தாயகத்தின் தேவைகள் எம்கண்முன்னே மலைபோல் இருப்பதை அனைவரும் உணர்வீர்கள். கடந்த காலங்களில் எமது தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆர்ப்பணிப்புடன் பலர் சேவையாற்றியிருந்தீர்கள். 

தொடர்ந்தும் உறுதியோடும், நம்பிக்கையோடும் பலர் பலதுறைகளில் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றீர்கள் உங்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றியோடு இறுகக் கரம்பற்றிக் கொள்கின்றோம். ஆனாலும் வெளியிலிருக்கும் திறன் கொண்டவர்கள், வல்லுனர்கள் உங்கள் திறமைகளை சேவைநோக்குடன் எமது கட்டமைப்புகளுடன் இணைந்து, பிறந்திருக்கும் 2017 ஆண்டு முதல் தாயகத்தின் வலிமைக்காக பணியாற்றுமாறு அன்புகரம் கொண்டு கேட்டுக் கொள்கின்றோம்.

அந்த நம்பிக்கைகளோடு நாம் ஒன்றாகி எம் மாவீரர்களினதும், மக்களதும் இலட்சியக்கனவை மெய்பிக்கவும் நனவாக்கவும் தொடர்ந்தும் உழைப்போம் என்று இந்தாண்டிலும் திடசங்கற்பம் பூணுவோம்.

நன்றி
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் "
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

செய்திகள்
வியாழன் April 19, 2018

இனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்  

செவ்வாய் April 17, 2018

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைப