வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

January 12, 2017

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார். பாட்டியுடன் வாடகைக்கு குடியிருந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த நபரின் வீட்டிற்கு முன்னால் வசித்து வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.  குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தை சுவிசில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நயினாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்
திங்கள் May 21, 2018

அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தும் நோக்கோடு 12 குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,