வாக்குச் சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள்!

Wednesday February 14, 2018

இம்முறை கட்சிகள் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய நிலையில், எந்தவொரு கட்சியும் வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்த தவறியமையால் பல வாக்குச்சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பெறுபேறுகளின் தாமதத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழித் தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானதற்கான காரணம் என்றும், எனவே உரிய பரீட்சைகளை நடத்தி இரு மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.