வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் - பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு

சனி செப்டம்பர் 19, 2015

பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் உள்ள வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

 

காவற்துறை அதிகாரிகளைப் போல சீருடை அணிந்த ஆயுததாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரும் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி இருந்தனர். இதற்கு தலிபானிய இயக்கம் உரிமை கோரியுள்ளது.