வான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி்!

புதன் டிசம்பர் 05, 2018

ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள நாவா, கிலான் மற்றும் கியோக்யானி பகுதிகளில் வசிக்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் நாவா மாவட்டத்தில் 20 பேரும், கிலான் மாவட்டத்தில் 40 பேரும், கியோக்யானி மாவட்டத்தில் 12 பேரும் என மொத்தம் 72 பேர் பலியாகினர். மேலும்,  பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று வாகனங்கள், 5 பைக்குகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றி அழிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.