வாள்வெட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது

Tuesday November 14, 2017

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ள நிலையில், வாள்வெட்டுக் குழுவின் தலைவன் எனக் கூறப்படும் இளைஞன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

'கிரிவலம்' எனும் புனைப்பெயரைக் கொண்ட இளைஞனை, ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து, வாள் ஒன்றுடன் நேற்று இரவு தாங்கள் கைது செய்ததனர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட வாள் 6 அடி நீளமானது எனவும், அவ்வாளில் தனது புனைப்பெயரைப் பொறித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்சம்பங்கள், வாள்வெட்டு, சென். பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் வைத்து அண்மையில் இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்குத் தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் கூறினர்.