வாள் வெட்டுக் குழுவினர்களுடன் தொடர்புடையவர்கள் கைது!

Thursday December 07, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுக்களின் சிறிய குழுவொன்று சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது.  குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 06 பேர் இன்று மதியம் வட்டுக்கோட்டை காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  பொறுப்பதிகாரி எச். எம்.பி.குணதிலக்க தெரிவித்தார். 

அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்களை வட்டுக்கோட்டை காவல் துறையினர்  கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

குறித்த சம்பவம் வன்முறைச் சம்பவங்களை தூண்டும் அடிப்படையில் வாள் வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவர்களை எதிர்வரும் 22 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மல்லாக நீதிமன்ற நீதிபதி ஏ.யுட்சன் உத்தரவு பிறப்பித்தார்.