வாஸ் குணவர்தன குற்றவாளியானார்!

Monday February 12, 2018

இரகசியப் காவல் துறை  அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் முன்னாள் பிரதி  காவல் துறை அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பிரதி காவல் துறை அதிபர் வாஸ் குணவர்தனவை கைதுச் செய்ய இரகசிய காவல் துறை அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்தில்  அதிகாரி ஒருவருக்கு  வாஸ் குணவர்தன மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதற்கமைய,  இவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.