வி.கே.சிங் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அழைப்பு

ஞாயிறு அக்டோபர் 25, 2015

அரியானா மாநிலத்தில் ஒரு தலித் குடும்பத்தை ஆதிக்க சாதி வெறியர்கள் எரித்துக் கொல்ல முயன்றதில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் கரிகட்டை ஆக்கப்பட்டுள்ளார்கள்.

 

இது நம் நெஞ்சை பதரவைப்பது மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியவும் வைத்துள்ளது. இதற்கு நீதி வேண்டும் எனபது ஒருபுறமிருக்க, இது குறித்து பாசக அமைச்சர் வி.கே.சிங் '' நாய்கள் மீது கல்லெறிந்தாலும் அதற்கு மத்திய அரசைப் பொறுப்பாக்குவீர்களா?'' என்று பேசியுள்ளார்.  எமது இயக்கம் சார்பில் வி.கே.சிங் கொடும்பாவி எரிக்க உள்ளோம். போராட்ட இடத்திற்கு வந்து அச்செய்தியினை தங்கள் நாளிதழ்/ஊடகத்தில் வெளியிட்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க உதவுமாறு வேண்டுகிறேன்.

 

 

வே.பாரதி 
பொதுச் செயலாளர் 
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.