விக்ரம் படத்தில் ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தம்

April 07, 2017

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்க உள்ள படத்தில், இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். 

`துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, விஜய்சந்தர் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். வடசென்னை பாணியில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘கெட்ச்’ என்ற பெயரை வைக்க படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தில் 2-வது கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘கங்காரு’, ‘வந்தாமல’, ‘கதிரவனின் கோடை மழை’ படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா, இப்போது, ‘மிகமிக அவசரம்’ படத்தில் காவல் துறை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறார். 

செய்திகள்