விஜய்யுடன் மோதும் சரத்குமார்!

ஒக்டோபர் 15, 2017

12 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சரத்குமார், நெப்போலியன், சுகாசினி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.பி.ஆர் இயக்க பி.எம். ராம் மோகன் தயாரித்துள்ளார். முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இரண்டாக பாகத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. இதற்கு முன் 2005ம் ஆண்டும் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ படமும், சரத்குமாரின் ‘ஐயா’ படமும் வெளியாகி இருக்கிறது. இரண்டும் பொங்கல் திருநாளில் வெளியானது. 12 வருடத்திற்குப் பிறகு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும், சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது.

செய்திகள்
வியாழன் January 04, 2018

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.