விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை

செவ்வாய் டிசம்பர் 04, 2018

விஜய் சேதுபதி நடிக்கும் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்னும் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். சீதக்காதி படத்தில் 75 வயது முதியவரான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை படத்தின் ப்ரோமோஷனுக்காக இரண்டு பாடல்களும், டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
 
இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தை விளம்பர படுத்த படக்குழு சூப்பர் முறையை கையாண்டுள்ளது. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமடைந்தவர்களுக்கு மெழுகு சிலை மியூசியங்களில் மெழுகு சிலை வைப்பார்கள். அது போன்று இந்த படத்தில் வரும் முதியவரான கதாபாத்திரத்தின் மெழுகுச் சிலையை எக்ஸ்பிரஸ் மாலில் வைத்துள்ளனர்.