விஜய் தான் முதல் இடம்-அமீர்

வியாழன் சனவரி 10, 2019

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே சண்டை கடுமையாக இருக்கும்.இதுதொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் ‘தமிழகத்தின் வசூலில் யார் நம்பர் 1... ரஜினியா அல்லது விஜய்யா?’ என்று இயக்குனர் அமீரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமீர், “தமிழகத்தின் வசூலை வைத்துப் பார்த்தால் விஜய் தான் நம்பர் ஒன்.

அவரது வசூலை வைத்து பார்த்தால், ரஜினிகாந்த் நம்பர் 2 தான். ஆனால், உலக அளவில் உள்ள வசூலை எடுத்துக் கொண்டால் ரஜினி சார் தான் நம்பர் ஓன். அவருக்கு தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, ஐதராபாத், இந்தி திரையுலகம், சீனா, ஜப்பான் என உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது. ” என்று சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.