விடுதலைப்புலிகள் வசமிருந்த உடையார்கட்டு காணியும் அரசு வசமிருக்கும் கேப்பாப்புலவு காணியும்

February 22, 2017

 20 நாட்களுக்கு மேலாக வெயிலிலும் மழையிலும் பனியிலும் உண்ணாமலும் உறங்காமலும், தமது நிலத்தை தாருங்கள் என்று அகிம்சை வழியில் வேண்டுகோள் விடுத்து ஏங்கித்தவிக்கும் எம்மக்களின் குரல் அரசாங்கத்திற்கோ அல்லது அரசியல் வாதிகளின் செவிப்பறை உடைந்த காதுகளுக்குள் இன்னும் போய் சேரவில்லை. 

ஏன் மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் கூட என்னும் மௌனமாகவே இருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இருந்தது போல. முன்னாள் போராளிகள் திரு. சுமந்திரனை (பா.உ) கொலை செய்ய முயற்சித்ததாக பொங்கியெழுந்து பல கண்டன அறிக்கைகள் விட்ட தமிழ் அமைப்புக்கள் கூட இந்த மக்களின் காணி விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன. 

இந்த சிறார்களின் வாடிய முகங்களை பார்த்த பின்னுமா உங்கள் இதயங்கள் இன்னும் இறுக்கிக்கிடக்கிறது. இதுவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனாக இருந்திருந்தால்!

நான் முல்லைத்தீவில் கடமையாற்றியபோது 2008 ம் ஆண்டு, பாரிய இடப்பெயர்வு நடந்துகொண்டடிருந்த வேளை நடந்த ஒரு சம்பவம்.

அப்பொழுது உடையார்கட்டில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிழமையில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டும் சிகிற்சை, மற்றும் தடுப்பூசி வழங்கலும் நடைபெறுவது வழக்கம் நான் அங்கு சென்ற வேளைகளில் எமது அந்த காணிக்கு வடக்கேயும் கிழக்கேயும் பொதுக்காணி / அரச காணி இருப்பதை அவதானித்தேன். ஒரு காலத்தில் இந்த இடத்தை வைத்தியசாலையாக தரமுயர்த்துகின்றபோது இந்த காணிகளை வைத்தியசாலை விஸ்தரிரிப்புக்காக அரச அதிபரிடம் கேட்டு பெறலாம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் அரசபடைகளின் ஆயுதங்கள் எம்மக்களை தின்று கொண்டிருந்த அந்த யுத்த காலத்தில் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் வளவள துறைக்கு பொறுப்பாக இருந்த திரு. சத்தியா என்பவர் தங்கள் மரங்களை விற்பனை செய்யும் இடமாக அந்த பொதுக்கனியை பாவிக்கத்தொடங்கினார். ஆனால் யுத்தமும் இடப்பெயர்வும் தீவிரம் அடைந்தபொழுது மக்கள் மல்லாவி, துணுக்காய், கிளிநொச்சி தர்மபுரம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து மூங்கிலாறு , உடையார்கட்டு போன்ற இடங்களில் தங்கத்தொடங்கினார்கள். அப்பொழுது புலிகளின் சுகாதாரத்துறையின் வைத்தியர். வண்ணன் மற்றும் சில ஊழியர்களுடன் எங்கள் சுகாதார நிலையத்தை ஒரு வைத்தியசாலையாக இயக்கத்தொடங்கினோம். அப்பொழுது சில விடுதிகள் அமைப்பதற்கு திரு. சத்தியா பாவித்துக்கொண்டிருக்கும் அந்த பொதுக்காணி தேவைப்பட்ட்து. நான் அவரை சந்திக்க முயன்றேன், முடியவில்லை. 

பின்பு தலைவர் பிரபாகரனுக்கு அந்தக்காணியின் அவசியத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதி , சுகாதாரத்துறையினனூடாக அனுப்பிவைத்தேன்.

 உடனே திரு சத்தியாவை அழைத்த தலைவர் பிரபாகரன், 24 மணித்தியாலத்திற்குள் அந்த காணியை எங்களிடம் ஒப்படைக்க சொல்லி கட்டளை இட்டாராம். தலைவரின் அந்தச்செயல் பல நூறு மக்களுக்கு சிகிற்சை அளித்து அவர்களின் உயிர்களை காப்பாற்றக்கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல் மக்கள் மீது அவருக்கிருந்த அக்கறையையும் அவரின் நேர்மையையும் எடுத்துக்காட்டியது. 

ஆனால் 20 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த கேப்பாபுலவு மக்கள் போராடடம் இப்போதைய தலைமைகளுக்கு ஏன் இன்னும் புரியவில்லை. அதுவும் அன்று தமிழினத்தின் தலைவனிடம் நாங்கள் கேட்டது பொதுக்காணியை. ஆனால் இன்று சிங்கள அரசிடம் கேட்பது எங்கள் சொந்தக்காணியை.சிங்கள அரசு எம்மக்களின் கனிகளை விடுவிக்கும் வரை எம்மக்களுக்கு ஆதரவை வழங்குவோம்.  எம்மக்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள், எம் அரசியல்வாதிகள் காளியாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 வைத்தியர் வரதராஜா

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

வெள்ளி June 01, 2018

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...