விடுதலையை வலியுறுத்தி மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம்

Friday October 12, 2018

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.மல்லாவி அனிச்சங்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் மல்லாவி சிவன் ஆலயம் வரை பேரணியாகச் சென்றனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.