விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை!

April 16, 2018

“வலி.வடக்கில் சில வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக” வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலி.வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியில் இருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான கட்டுவான் வீதிக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது.

இராணுவத்தினர் வீதிக்கு குறுக்காக உயர் பாதுகாப்பு வலய முள் வேலிகளை அமைத்துள்ளனர். அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக” தெரிவித்தார்.

செய்திகள்
வெள்ளி June 22, 2018

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள