விடை பெற்று செல்  2018 ஆம் ஆண்டே !

Sunday December 30, 2018

விடை பெற்று செல் 
2018 ம் ஆண்டே 
உன்னை சிறப்பாக 
வழியனுப்பி 
வைக்கிறோம் போய்விடு 
இந்த ஆண்டில் 
எமக்கான தீர்வு 
வருமென ஏங்கினோம் 
தீர்வு பொதி உள்ளதாகவும் 
தீர்வு வரைவு வரைவதாகவும் 
தீர்வு திட்டம் பற்றி 
வர்த்தமானியில் அறிவிப்பு
வரும் என்றும் கூறியது 
சிங்களத்தரப்பு 
நமது தரப்போ
சுயாட்சி என்றார்கள்
ஒற்றை ஆட்சி எனவும் 
இருதேசம் ஒரு நாடு
ஒன்றுபட்ட 
இலங்கைக்குள் தீர்வு
என்று புகழ்ந்தார்கள் 
இதுவரை கண்ட
சிங்கள ஆட்சிகளில் 
இது ஒருநல்லாட்சி என 
போற்றவும் தவறவில்லை 
எதுவுமே நடக்கவில்லை 
எமக்கு 
நீ விடை பெறும் 
நாட்களில் கூட எம் 
இனத்தை இயற்க்கை 
கொண்டு சீண்டிவிட்டாய் 
வெள்ளத்தில் 
தத்தளிக்கவிட்டு 
ஏதிலிகளாக மாற்றி 
தற்காலிக 
முகாம்களுக்குள் 
முடக்கிவிட்டாய் 
அகராதியில்உள்ள 
அகதி 
எனும் சொல்லுக்கு 
அர்த்தம் புகட்டிடவா 
அகிலத்தில் நாம் 
பிறப்பெடுத்தோம் 
எமக்குமட்டும் ஏன் 
இந்த கொடுமை 
நாம் இழந்த 
இழப்புக்கள் போதாதா
பிறக்கும் 2019
ஆண்டிட்கு
உன் இயலாமையை 
சத்தமிட்டு 
சொல்லிவிட்டு போ 
அத்தோடு 
விடுதலை 
வேட்க்கையோடு
ஈழத்தமிழ் இனம் 
இன்னும்
உள்ளதென்றும் 
கட்டியம்
கூறிவிடு

றொப்