விண்வெளியில் சாதனை புரியும் 56 வயது பெண்!

நவம்பர் 18, 2016

விண்வெளிக்குச் செல்லும் மிக வயதான, நீண்ட அனுபவம் கொண்ட பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் பெக்கி விட்சன்.  56 வயதான விட்சன் தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் தொடங்கினார். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த பெண் என்ற பெருமை அவருக்குக் கிடைக்க இருக்கிறது.

 அவருடன் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்ணுக்குச் சென்ற அவர்கள், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

செய்திகள்
திங்கள் நவம்பர் 13, 2017

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் 76 மொழிகளில் பாடியது உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.