வித்தியாசமான முறையில் வெற்றியை கொண்டாடிய வேட்பாளர்!

Wednesday February 14, 2018

மதுகம பிரதேச சபைக்கு இம்முறை ஸ்ரீலங்கா  பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனது வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

பட்டாசுகளை கொளுத்தி வெற்றியை கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மதுகம நகரத்தை சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடியுள்ளார். 

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக அவருக்கு ஆதரவாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக மக்களுக்கு சேவை செய்வதே தனது நோக்கம் என்று வேட்பாளரான லலித் ரணசிங்க கூறியுள்ளார்.