வித்தியாதரனை நிறுத்துவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள் குழப்பம்!

December 07, 2017

உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வேட்பாளர் தொடர்பாக இப்போதே குடுமிப்பிடி சண்டைகள் உச்சம்பெற்றுள்ளது.வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் ஆசனத்திற்காக போட்டிபோட்டு இறுதியில் உறுப்பினர் ஆசனத்திற்கு போட்டியிடக்கூட சந்தர்ப்பம் கிட்டியிராத ந.வித்தியாதரன் மும்முரமாகவுள்ளார்.எனினும் மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என்.வித்தியாதரனை நிறுத்துவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் கதிரையில் கண்வைத்துள்ள சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மைத்துனனுமான சரவணபவன் போன்றவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக சொல்லப்படுகின்றது.

எனினும் இந்திய தூதரகம் வித்தியாதரனை சிபார்சு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.மறுபுறம் மாகாண சபை உறுப்பினர்கள் ஆனொல்ட், ஜெயசேகரன் ஆகியோரில் ஒருவரை மேயர் வேட்பாளராக நியமிக்கவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.சுமந்திரனின் தெரிவு ஆனோல்ட்டாக உள்ள போதும் ஜெயசேகரத்திற்கு வழங்கப்பட்ட உறுதி மொழி தொடர்பில் மாவை.சேனாதிராசா வாதிட்டுவருகின்றார்.
 
இதனிடையே சுமந்திரனை சந்தித்த ஊடகவியலாளர்கள் சிலர் முதல்வர் வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதும் அவர் மௌனம் காத்துள்ளார்.
 
இந்நிலையினில் ஜனநாயகப்போராளிகளை தம்முடன் இணைக்க ஏதுவாக வித்தியாதரனை மீண்டும் உள்ளே கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையினில் அவர் முதல்வர் கதிரைக்கு பேரம் பேசுவதாக சொல்லப்படுகின்றது. இதனால் தற்போதைக்கு முதல்வர் பெயரை முன்னிறுத்தாது போட்டியிட தமிழரசு தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. 

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.