வித்தியா படுகொலை வழக்கின் தொகுப்புரை!

Wednesday September 13, 2017

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொகுப்புரை இன்று ட்ரயல் அட் பார் முறையில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றுள்ளது.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார ரட்ணம் தனது தொகுப்புரையை வாசித்தார்.

அதன்படி, 7 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், 1ஆம் மற்றும் 7ஆம் சந்தேகநபர்களுக்கெதிராக எந்தவொரு சாட்சியுமில்லையென சொலிஸ்டர் ஜெனரல் குமார ரட்ணம் தெரிவித்துள்ளார்.

தொகுப்புரை

இரண்டாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் இலக்க சந்தேக நபர்களே மாணவி வித்தியா பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள்.

இதில் ஆறாம் இலக்க சந்தேக நபரே மாணவி வித்தியாவை நிர்வாணப்படுத்தி பலவந்தமாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார். 6ஆம் இலக்க நபர் குற்றத்தைப் புரிந்தபோது 2ஆம், 3ஆம் சந்தேக நபர்களான சகோதரர்கள் மாணவி வித்தியாவின் கைகள் மற்றும் கால்களைப் பிடித்திருந்தனர்.

6ஆம் இலக்க நபர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தபோது கறுப்புநிற கையடக்கத் தொலைபேசியில் ஐந்தாம் இலக்க நபர் குறித்த சம்பவத்தை நிழற்படம் மற்றும் காணொளியை பதிவு செய்தார்.

5ஆம் இலக்க சந்தேக நபர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தபோது 6ஆம் இலக்க சந்தேகநபரான துஷாந்தன் நிழற்படம் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்தார். இந்த நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை என்ன செய்யப்போகின்றீர்கள் என காவலிலிருந்த மாப்பிள்ளை என்று அழைக்கப்படுகின்ற நடராசா குகனேசன் வினவியபோது இவற்றை சுவிஸிலுள்ள தனது மச்சானுக்கு அனுப்பிவைக்கப்போவதாக 6ஆம் இலக்க சந்தேகநபர் அவருக்குப் பதிலளித்தார்.

வழக்கில் அரசதரப்பு சாட்சியாக மாறிய 11ஆம் இலக்க சந்தேக நபரான உதயசூரியன் சுரேஸ்கரனும், மாப்பிள்ளை எனப்படும் சந்தேகநபரும் துஸ்பிரயோகம் நடந்தபோது வீதியின் இரண்டு பக்கமும் காவலில் இருந்துள்ளனர்.

2, 3, 5, 6ஆம் இலக்க சந்தேகநபர்களே மாணவி வித்தியாவை மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர். மாணவி வித்தியாவின் சைக்கிள் மற்றும் புத்தகப் பை என்பவற்றை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து பாழடைந்த மலசலகூடத்தில் தாமே ஒழித்து வைத்திருந்ததாக அரச தரப்பு சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவை 6ஆம் இலக்க சந்தேகநபர் காதலித்து வருவதாக கூறியதாலேயே மாணவியை தூக்கிக் கொடுப்பதற்கு தான் சம்மதித்ததாக மாப்பிள்ளை எனும் சந்தேகநபர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து பல தடவைகள் முயற்சித்தபோதிலும் 6ஆம் இலக்க சந்தேகநபரான துஷாந்தன் கத்தியைக் காட்டி பயமுறுத்தியதால் தான் காவலில் இருந்ததாக மாப்பிள்ளை தெரிவித்திருந்தார்.

2ஆம் இலக்க சந்தேக நபரே மாணவியின் உள்ளாடையை தடியொன்றில் குத்தி வாய்க்குள் திணித்ததாகவும் மாப்பிள்ளை தெரிவித்தார்.

பிறிதொரு வழக்கில் வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மின்பொருள் பொறியியலாளரிடம் தன்னையும் தனது சகோதரரையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றித் தரும் பட்சத்தில் 2 கோடி ரூபா தரமுடியும் என சுவிஸ்குமார் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வேறு யாருக்காவது தெரியப்படுத்தினால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என சுவிஸ்குமார் அச்சுறுத்தியிருந்தார்.

குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக குறித்த பொறியியலாளர் புத்தளம் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்தச் சம்பவத்தின் பழியை கடற்படையினர் மீது சுமத்துவதற்கே கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு சடலம் கொடூரமான முறையில் போடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை என்பதைக் காண்பிப்பதற்காகவே கொழும்பில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சில இடங்களுக்குச் சென்று வந்ததாக மென்பொருள் பொறியியலாளரிடம் சுவிஸ்குமார் தெரிவித்திருந்தார். இக்குற்றச் செயலானது கனகச்சிதமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2ஆம் இலக்க சந்தேகநபரின் மனைவியின் சகோதரன், 2ஆம் மற்றும் 3ஆம் சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்ததைக் கண்டதாக சாட்சியமளித்துள்ளார்.

சம்பவத்திற்கு முதல் நாளான 12ஆம் நாள், காலை 4, 5, 8, 9 ஆம் இலக்க சந்தேகநபர்கள் வாகனமொன்றிலிருந்தவாறு மாணவி வித்தியா பாடசாலையிலிருந்து வருவதை அவதானித்துக்கொண்டிருந்தனர். இதனை ஞானேஸ்வரன்,இலங்கேஸ்வரன சாட்சியமளித்துள்ளார்.

இந்தச் சாட்சியம்சந்தேக நபர்கள் நால்வரும் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் புங்குடுதீவில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது.

குறித்த மாணவி மிது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்காரமானது, சுமார் ஒருமணித்தியாலமாக இடம்பெற்றுள்ளதாக 6ஆம் இலக்க நபர் வேலணைப் பிரதேச சபையில் ஒப்பமிட்டுள்ள குறிப்புப் புத்தகத்தின்படி அறியமுடிகின்றது.

குறித்த தினத்தில் 6ஆம் இலக்க சந்தேகநபர் காலை 9.15மணியளவில் அலுவலகத்துக்கு சமூகமளித்து 8.15 இற்கு கையொப்பமிட்டுள்ளார். இவர் நேரம் மாறிக் கையொப்பமிட்டதை வேலணைப் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் உறுதிப்படுத்தி சாட்சியமளித்துள்ளனர்.

மே மாதம் 18ஆம் திகதி குறித்த கலவரம் தொடர்பில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதில் சட்டத்தரணி விரிதமிழ்மாறன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சுவிஸ்குமார் விடுதலைசெய்யப்பட்டு கொழும்பிலுள்ளதாக ஒருவர் எழும்பிக் கூச்சலிட்டார்.

விரி தமிழ்மாறின் வடமாகாண சிரேஷ்ட பொல்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தொடர்பில் ஆதாரங்கள் இருந்திருந்தால் கைதுசெய்யப்பட்டிருப்பார். இல்லையென்றால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் எனப் பதிலளித்திருந்தார்.

9இல் இலக்க சந்தேகநபர் இக்குற்றச் செயலின் பிரதான சூத்திரதாரி என்றும்அவரது வெளிநாட்டுப்பயணத்தை நிறுத்துமாறும், கடவுச் சீட்டினைமுடக்குமாறும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனிடம் லலித் ஜெயசிங்க உத்தரவிட்டிருந்தார்.

அவ்வாறு உத்தரவிட்டவர் pன்னர் ஏன் மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார் எனத் தெரியவில்லை எனத் தமிழ் மாறன் கூறினார்.

மக்களால் சுவிஸ்குமார் கட்டிவைத்து தாக்கப்படும்போதுசம்பவ இடத்துக்குச் சென்ற விஜயகலாமகேஸ்வரன் 2 மணித்தியாலங்களாக மக்களிடமிருந்து பாதுகாத்து தாய் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்தச் சாட்சியங்களில் எவ்வித முரண்பாடுகளும் இல்லையெனச் சுட்டிக்காட்டிய பிரதி சொலிஸ்ரர் ஜெனரல் இவர்கள் தொடர்பில் எந்தவொரு விடுக்கையும்விடுக்கப்படவில்லையெனவும்தெரிவித்துள்ளார்.