விமானப் படை முகாம் விடுதியில் தீ பரவல்!

Thursday July 12, 2018

தியத்தலாவை -விமானப் படையினரின் முகாமிலுள்ள படையினரின் விடுதியொன்றில்  இன்று பகல் திடீர் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மின்சார கோளாறே குறித்த தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.