வியட்நாம் அதிபர் காலமானார்!

Friday September 21, 2018

வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங்  உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார்.  உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த டிரான்  டாய் குவாங் ஹனோவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உள்நாடு வெளிநாடு வைத்திய பேராசிரியர்கள் டிரான்க்கு சிகிச்சையளித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். டிரான் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.