வில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டுவிழா!

Thursday November 08, 2018

பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் பிராங்கோதமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டுவிழா கடந்த சனிக்கிழமை (03.11.2017) அன்று 13.00 மணி தொடக்கம் வெகுசிறப்பாக இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தமிழ்ச்சங்க வரவேற்பு சுடரினை தமிழ்சோலை ஆசிரியர்கள் ஏற்றி வைத்தனர். பிரதம விருந்தினர்கள் மாணவர்களின் காவடி ஆட்டத்துடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

அக வணக்கத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களாக வருகைதந்திருந்த மாநகர சபை உறுப்பினர்களும், விருந்தினர்களும் மங்கள விளக்கை ஏற்றிவைத்தனர்.

வரவேற்புரையைத் தொடர்ந்து மாணவர்களால் தமிழ்ச் சோலை கீதம் இசைக்கப்பட்டது. அரங்க நிகழ்வுகளாக நடனம், கவிதை, பேச்சு, பாட்டு, நாடகம் என்பனவும் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டதுடன், அவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)