விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

May 18, 2017

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு மதியம் 12 மணிக்கு Brandenburger Tor முன்பாக கண்காட்சி பதாதைகளை பார்வைக்கு வைத்து ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பல்லின  மக்களுக்கான  விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.ஈழத்தமிழர்களின் இனவழிப்பு காட்சிப்படுத்தலை கண்டுகொண்ட பல்லின மக்கள் 
தமது கவலையையும் சமநேரத்தில் கரிசனையையும் தெரிவித்தார்கள்.

 மாலை 3 மணிக்கு வெளிவிவகார அமைச்சுடன் நீண்டநேர முக்கிய உரையாடலும் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு முக்கிய அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புடனும் சந்திப்பு  நடைபெற்றது.இறுதியாக மாலை 6:30  மணிக்கு விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை முன்னெடுத்தவர்களுக்கும் பேர்லின் வாழ் உறவுகளுக்குமான சந்திப்பு நடைபெற்று , புலம்பெயர் மக்களுக்கு இருக்கும் தார்மீக கடமைகளை மீள்நினைவுப்படுத்தி தமிழீழ விடுதலையை நோக்கி அயராது உழைப்போம் என உறுதியெடுக்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நாளைய தினம் Düsseldorf மாநகரில்  நடைபெறவுள்ள  தமிழின அழிப்பு நாள் பேரணியில் இணைந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...