விவசாயிகளுக்கு தேவையான உரத்தை அரசாங்கம் வழங்கும்!

February 22, 2018

அடுத்த போக ஆரம்பத்தின் போதே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான உரத்தின் சந்தைப் பெறுமதிக்கு சமனான முழுமையான நிதியையும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார். 

நெல், சோளம், சோயா, மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கே இந்த உர மானியம் வழங்கப்பட உள்ளது. 

விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் விஷேட திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் தேசிய பொருளாதார சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

அதேவேளை அந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா பெறுமதியான இலவச காப்புறுதியும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

செய்திகள்
வெள்ளி June 22, 2018

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள