விவேகமாக மாறிய ஜோதிகா!

சனி ஜூலை 28, 2018

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். 

`நாச்சியார்' படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் வெளியீடு  செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.