விவேகம் படத்தை பார்க்கும் போது கமல்ஹாசன் தன்னை மறந்து விசில் அடிப்பார்!

August 04, 2017

அஜித்தின் விவேகம் என்ற பெரிய படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் அக்ஷாரா ஹாசன். படத்தை பற்றி இவரும் நிறைய பேட்டிகளில் வியப்பாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் விவேகம் படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கும் கபிலன் ஒரு பேட்டியில், படத்தின் திரைக்கதை எழுதும்போது எனக்கு மெய்சிலிர்த்த காட்சி அக்ஷாரா ஹாசனின் அறிமுகக் காட்சி.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடிகைகளுக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சி இருந்திருக்குமா என்று தெரியவில்லை.  திரையரங்களில் அவரின் காட்சியை கமல்ஹாசன் பார்க்கும்போது தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது, அரங்கம் அதிரப்போவது உறுதி என்று கூறியுள்ளார்.

செய்திகள்
சனி December 02, 2017

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.