விஷாலின் 'இரும்புத்திரை'!

செவ்வாய் ஜூன் 19, 2018

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என இரு பதவிகளில் இருக்கும் விஷால், 14 ஆண்டுகளுக்கு முன்னர் 2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே  என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்த வருடம் வந்த  சண்டக்கோழி  படம் பெரிய வெற்றி பெற்றதால் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு ஹீரோவாக உயர்ந்தார். பின்னர் வெளிவந்த திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை  ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதே உண்மை.

 11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த  இரும்புத்திரை  படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது. இந்தப் படம்தான் அவர் இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் வெளிவந்த பத்து நாட்கள் ஆன நிலையில் இப்படத்தை வாங்கிய அனைவருமே நல்ல லாபத்தைப் பெற்றுவிட்டார்களாம். 30 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியிருக்கும் என்கிறார்கள்.

 ;இரும்புத்திரை  படத்தின் வெற்றியால் அடுத்து விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி  படத்தை இப்போதே வாங்கிட வேண்டும் என பலரும் முந்திக் கொண்டு இருக்கிறார்களாம். இபபடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மித்ரனையும் பல முன்னணி நடிகர்கள் அணுகியிருப்பதாகத் தகவல்.