விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில்!

Monday July 16, 2018

கல்வி அமைச்சில் பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் சிலருக்கு தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் இருக்கும் தொடர்பின் காரணமாக வினாத்தாளில் உள்ள விடயங்கள் முன்னரே வெளியிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

உயர்தர பரீட்சையில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக பல்கலைகழங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிட்டம்புவ பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.