வீரவன்ச தனி அறையில் தடுத்து வைப்பு!

January 11, 2017

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மகசீன் சிறையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஈ அறையில் கிட்டத்தட்ட 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்சவின் பாதுகாப்பிற்காக ஈ சிறைச்சாலை தொகுதியில் தனியான அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச போன்றோர் இந்த அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட 40 வாகனங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைக்காக பயன்படுத்தியமையினால் அரசாங்கத்திற்கு 91 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

நெடுந்தீவில் கடந்த 16 ஆண்டுகளாக கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நூல் நிலையம், மற்றும் 15 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் போன்றன உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிய போதும் இதுவரை அ

புதன் ஒக்டோபர் 18, 2017

ஒரு நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை படைத்தரப்பு நிறைவேற்றவில்லை, புதுக்குடியிருப்பு மண்ணில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக படை ஆட்சியே நடைபெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.