வெடிகுண்டு இருப்பதாக அநாமேதய தொலைபேசி அழைப்பு!

Friday October 12, 2018

நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

பாடசாலைக்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 20 நிமிடத்திற்குள் மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றி விடுமாறும் அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்று பாடசாலை அதிபருக்கு வந்துள்ளது. 

இதனால் அங்கு சற்று அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதுடன், மாணவிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அநாமேதய தொலைபேசி அழைப்பு சம்பந்தமாக காவல் துறை  மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.