வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக பேரணி

April 20, 2017

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலியாகினார்.

வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற பேரணியின் போது,   காவல் துறை திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினான். இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய கராக்கஸில் அரசுக்கு எதிராக ரெட்-கிளாட் மதுரோ ஆதரவாளர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கலவரக்காரர்களை ஒடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இவ்வாறு போராட்டக்காரர்களுக்கும் -  காவல் துறையினருக்கும்  இடையே ஏற்பட்ட வன்முறையால் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மோட்டார் வண்டியில் வந்த 17 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  மேலும் ஒரு பெண்ணும் துப்பாக்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடைசி ஒரு மாதத்தில் மட்டும்   காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 

செய்திகள்