வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி - லெமன் ஜூஸ்

March 31, 2017

வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 2 துண்டு
புதினா - 10 இலைகள்
எலுமிச்சை - 1
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை : 

* முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, தேன்,  உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து, மீண்டும் ஒருமுறை அடித்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து பருகவும்.

* தர்பூசணி - லெமன் ஜூஸ் தயார்…!!!  

செய்திகள்