வெலிக்கடை கைதிகள் 100 பேர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

செவ்வாய் பெப்ரவரி 13, 2018

வெலிக்கடைச் சிறை்சசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் 100 பேரை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் காணப்படும் நெருக்கடியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்துக்குள் கைதிகள் இடமாற்றப்படவுள்ளனர்.

 இதேவேளை தங்காலை சிறை்சசாலை மூடப்பட்டுள்ளதால் அங்கிருந்த சிறைக் கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் .