வெலிக்கடை சிறையில் பதற்றம்! 8 அதிகாரிகள் காயம்!

Monday August 20, 2018

வெலிக்கடை சிறைச்சலையில் பெண் சிறைக் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட பெறும் குழப்பநிலை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த அமைதியின்மை காரணமாக எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் சிறை கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் முதல் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதினையடுத்தே குறித்த அமையின்மை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட  52 பெண் சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டு மாற்று சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.