வெளிநாடு செல்ல அனுமதி கோரும் யோஷித ராஜபக்ஷ!

May 20, 2017

 வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்தார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று விளக்கமளிப்பதற்கு காலம் வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, எதிர்வரும் 23ம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஏ.ஆர். ஹெய்யன்துடுவ தீர்மானத்துள்ளார்.

செய்திகள்
வியாழன் May 24, 2018

விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.