வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தனர் ஐதேக தலைவர்கள்!

Thursday December 06, 2018

ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு  எடுத்துரைத்துள்ளனர்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்துள்ளார் என ஐக்கியதேசிய கட்சித்தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு  ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதையும்  ஐதேக  தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.