வெள்ளவத்தையில் - இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

Wednesday August 15, 2018

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   குறித்த பெண்ணின் சடலம் வெள்ளவத்தை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

 இவரது கணவர் ஒரு வைத்தியர் என்பதோடு இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயுமாவார். இவர் தனது பிள்ளைகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் தனது அறைக்குச் சென்று  உயிரை மாய்த்துக் கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

 மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவுகாவல் துறை  பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.