வெவ்வேறு சம்பவங்களில் பதினாறு பேர் கைது!

ஒக்டோபர் 12, 2017

 பல பகுதிகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேகத்தின் பேரில் வெவ்வேறு நடவடிக்கைகளில் பதினாறு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கிழக்குப் பிராந்தியத்தின் புறாத் தீவுப் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று பேரை கடந்த நான்காம் திகதி கடற்படையினர் கைது செய்தனர்.  மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் மற்றும் அனுமதிக்கப்படாத வலைகள் இரண்டையும் பறிமுதல் செய்த கடற்படையினர், அவற்றை நிலாவெளி வனவிலங்கு அதிகார சபையில் ஏல விற்பனைக்காகக் கையளித்தனர்.

இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், கடற்படையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கேரள கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேர் கடந்த ஆறாம் திகதி கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வாழைச்சேனை  காவல் துறையில்   கையளிக்கப்பட்டன.

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

 சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.