வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மஹந்தவிற்கு உள்ளது!

வெள்ளி ஜூன் 22, 2018

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வந்தால், ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் செல்வாக்குப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவிடமே உள்ளது. அவரினால் தெரிவு செய்யப்படுபவருக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள். அவர் சிறந்த ஒருவரையே தெரிவு செய்வார் எனவும் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.