வேப்பிலையால் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும்!

ஞாயிறு ஜூலை 01, 2018

வேப்பிலை மற்றும் வேப்பம்பூவை பயன்படுத்தி மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என தெலுங்கானா மாநில மருந்தியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மைய ஆய்வாளர்கள் வேப்பிலை மற்றும் வேப்பம்பூ மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, பரிசோதனை முயற்சியாக வேப்பிலையில் உள்ள ராசாயண கலவையை சிகிச்சையாக அளிக்கையில் நோயாளியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை கண்டு ஆராய்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆராய்சியில் பங்கேற்ற விஞ்ஞானி சந்திரய்ய கொடுகு கூறுகையில், ’வேப்பிலை மற்றும் வேப்பம்பூவில் உள்ள நிம்போலைட்(Nimbolide ) எனும் ரசாயண கலவை மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை பெருமளவு கட்டுப்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும், கீமோதெரப்பி சிகிச்சையின் பக்க விளைவுகளையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் ஆயூஷ்  உள்ளிட்ட அமைப்புகளின் நிதியுதவியுடன் இந்த புதிய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகளின் மூலம் இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பு  இறுதி கட்டத்தை எட்ட இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்’ என தெரிவித்துள்ளார்.