வேலணை மேற்கு விடிவெள்ளி அமைப்பு உதயம்!

June 19, 2017

யாழ்ப்பாணம் வேலணை மேற்கு பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வேலணை மேற்கு விடிவெள்ளி அமைப்பு என்று சமூக அமைப்பு உதயமாகியுள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் வேலணை மேற்கைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களால் உருவாக்கப்பட்டுள்ள இவ் அமைப்பு, கடந்த சித்திரை மாதம் முதல் இம் மாதம் (ஆனி) வரையான இரண்டரை மாத காலப் பகுதியில் வேலணை மேற்கு பிரதேசத்தில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. 

சமூகச் சீர்கேடுகள் மற்றும் திருட்டுக்கள் நிகழ்வதைத் நோக்கத்துடன் வேலணை மேற்கில் உள்ள பற்றைக் காடுகளை வெட்டியகற்றுதல், இரவு நேரங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பிரதேசவாசிகளின் நலன் கருதித் தெருக்களில் மின்விளக்குகளைப் பொருத்துதல், பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான கட்டிடத்தை அபிவிருத்தி செய்தல், சிறுவர்களுக்குத் தேட்டக் கணக்குகளைத் திறந்து வைத்தல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு செயற்திட்டங்கள் கடந்த இரண்டரை மாத காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச