வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் நில அளவைத் திணைக்களம்!

Wednesday March 14, 2018

அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நில அளவைத் திணைக்களத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதன் மூலம் பாரியளவான நிதி மோசடி இடம்பெறும் அச்சுறுத்தல் நிலவுவதாக அதன் தலைவர் டப்ளியூ. எம். பீ. உடுகொட கூறினார். 

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் (14) முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இம்மாதம் 16ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் டப்ளியூ. எம். பீ. உடுகொட கூறினார்.