வைகோவை சந்திக்காமல் அவமதித்த அமெரிக்க துணை தூதர்க்கு கண்டனம்

புதன் செப்டம்பர் 02, 2015

ஈழத் தமிழர்களுக்கு எதிராக துரோகம் இழைப்பது போல் உள்ளக விசாரணையே போதும் என்று அறிவித்துள்ள அமெரிக்காவின் போக்குக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரை சந்தித்து முறையிட்டு வருகின்றனர். 

 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துணை தூதரை சந்திப்பதற்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தார்.  அதனடிப்படையில் அவரை சந்திக்க செல்லும் போது அமெரிக்க துணை தூதர் அலுவலகத்தில் இருந்து கொண்டே வைகோவை சந்திக்காமல் அவமதித்துள்ளார். 

 

ஆலோசகர் ஒருவர் மூலமாக வைகோவின் மனுவை பெற செய்திருக்கிறார். இந்த செயல் வைகோவை அவமதிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும். இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

 

இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்கவும், வைகோ அவமதித்த அமெரிக்க துணை தூதருக்குத் தனது கண்டனத்தை தெரிவிக்கவும் இந்திய அரசு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.