வௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்!

Friday August 17, 2018

கொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பல, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் ஆரப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 36 வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டங்களுக்கு அமைய, 3 இறைப்பிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இவை, அம்பதலை,மாலபே,தலங்கம,எவரியஹேன ஆகிய பிரதேசங்களில், வௌ்ள நீரை கட்டுப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.