ஷாருக்கான் - அமீர்கான் எப்படி? அனுஷ்கா ஷர்மா விளக்கம்

யூலை 29, 2017

ஷாருக்கான் மற்றும் அமீர்கான் இருவரும் எப்படி? என்றும், அவர்களிடம் பிடித்தது, பிடிக்காதது குறித்து பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா நடித்துள்ள ‘ஜப்ஹேரி மெட் சீஜல்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய ஷாருக்கான், “உண்மை வாழ்க்கையில் காதல் வி‌ஷயத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன்” என்றார்.

இது பற்றி கருத்து கூறிய அனுஷ்கா சர்மா, “ஷாருக்கானுடன் காதல் காட்சியில் நடிப்பது சுலபமானது. அவருடைய கண்களில் ஒரு வித உண்மை இருக்கும். அதை திரையில் பார்க்கும் போது அனைவரும் உணர்வீர்கள். என்னைப் பொருத்தவரை ஷாருக்கான் ஒரு மைக்ரோ போனை கூட அழகாக ரொமான்ஸ் செய்வார்” என்று குறிப்பிட்டார்.

பின்னர் அனுஷ்கா சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அமீர்கானிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்...

“அமீர்கான் மிகவும் புத்திகூர்மையானவர். அவரது இந்த திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சில சமயங்களில் அவர் நம்மை கவனிக்கிறாரா, இல்லையா? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நடந்து கொள்வார். இது அவரிடம் எனக்கு பிடிக்காத வி‌ஷயம்” என்றார்.

செய்திகள்