ஸ்காபுரோவில் ஆளும் லிபரல் கட்சி நடாத்தும் பொங்கல் விழா !

Friday January 12, 2018

மரபுரிமைத் திங்களில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாகள் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழா ஒன்றிற்கு தயாராகி வருகிறது. வரும் சனவரி 16ஆம் நாள் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் இது நடைபெறவுள்ளது.

ரொரன்ரோ பெரும் பாகத்தில் உள்ள 18 லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்;கள் அமைச்சர்கள் உட்பட கலந்து கொள்கின்றனார். கனடியப் பிரதமர் யஸ்ரின் ரூடோ அவர்களும் கலந்து கொள்கிறார். 2015 இன் பிற்பகுதியில் நடைபெற்ற கனடிய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தாம் ஆட்சிக்கு வந்தால் பல விடயங்களை செய்வதாத தமிழ் மக்களுக்கு லிபரல் முக்கியஸ்தர்கள் எழுத்துமூலம் உறுதி வழங்கிய நிலையயில் அதில் பல விடயங்கள் கிடப்பில் போடப்பட்டதால் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துள்ளனர் என்பதை ஆளும் கட்சி உணர ஆரம்கித்துள்ளது
.
அதற்கு கடந்த ஆறு மாதஙளாக தமிழர் விவகாரங்களை பிரதான எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் எழுப்பி வருவது ஆளும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தாயகத்தில் உள்ள மக்களுக்கான புனர்நிர்மாணம் மற்றும் புனருத்தாரனம் விடயத்தில் பாரிய பங்களிப்பு ஒன்றை செய்வதற்கு அக்கட்சி தயாராகி வருகிறது. அத்தகைய அறிவிப்பு ஒன்றை பிரமதர் இவ்வொன்றுகூடலில் வெளியிடலாம். இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்படும் போது வெளியடப்படும் போது வழமைபோல் இது எங்களால் தான் நடைபெற்றது என சிலர் உரிமை கோரலாம். ஆனால் அதற்கான பொறுப்பு லிபரல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

இவ்வொன்று கூடலில் நீங்கள் கலந்து கொள்ளவிரும்பின் முன்கூட்டிய பதிவு முக்கியம். உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து அப்பதிவை மேற்கொள்ளலாம். அவர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. அல்லது tiny.cc/THM2018 என்ற இணைப்பில் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்யலாம். வரும் சனிக்குள் பதிவுகள் செய்யப்பட்டாக வேண்டும்.

Brampton – Mississauga

Hon. Navdeep Bains MP (Mississauga - Malton)
Omar Alghabra MP (Mississauga Centre)
Raj Grewal MP (Brampton East)
Sonia Sidhu MP (Brampton South)
Ruby Sahota MP (Bramton North)
Peter Fonseca MP (Mississauga East - Cooksville)
Kamal Khera MP (Brampton West)
Iqra Khalid MP (Mississauga - Erin Mills)

Durham
Mark Holland MP (Ajax)

 

Toronto
Hon. Kohn MaKay MP (Scarborough Guildwood)
Hon Judy Sgro MP (Humber River - Black Creek)
Bill Blair MP (Scarborough SouthWest)
Gary Anadasangaree MP (Scarborough Rouge Park)
Shaun Chen MP (Scarborough North)
Salma Zahid MP (Scarborough Centre)
Jean Yip MP (Scarborough Agincourt)

York
Mary Ng MP (Markham Unionville)