ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்!

ஞாயிறு ஏப்ரல் 15, 2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி முதல் 22-ந்திகதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி முதல் 22-ந்திகதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது சுற்றுப் பயணத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோவில்பட்டியில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறார். எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் சென்று இரவு 7.45 மணிக்கு முடிக்கிறார்.

கரிசல்குளத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாக இரவு 7.30 மணிக்கு குறுக்குச்சாலையில் முடிகிறார்.

செய்துங்கநல்லூரில் மாலை 4 மணிக்கு தொடங்கி ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக இரவு 7.30 மணிக்கு உடன்குடியில் முடிகிறார்.

திருவைகுண்டத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி ஏரல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டணம், திருச்செந்தூர், ஆலந்தமழை, குலசேகரபட்டணம், மணப் பாடு வழியாக இரவு 8 மணிக்கு பெரியதாழையில் முடிகிறார்.

28-ந்திகதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டீ. சிக்னல் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.