ஸ்ராஸ்பூர்க்கில் கறுப்பு யூலை தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்!

Tuesday July 24, 2018

கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள்  (24.07.2018) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது. கவனயீர்ப்பு நிகழ்விற்கு  வேற்றினமக்களின் அமைப்பு பிரதிநிதிகள்,  மாவடட சபை உறுப்பினரும் முன்னாள்ஸ்ராஸ்பூர்க் நகர பிதாவும் பிரஞ்சு  நாடாளுமன்ற உறுப்பினர் எறிக் எல்குபி அவர்களும் , கலந்து கொண்டுபொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்து  கருது தெரிவிக்கையில்

  பிரஞ்சு நாடாளுமன்றத்திலும் எமது நிரந்தர தீர்வு பற்றி வலியுறுத்துவதாகவும், தேசத்தின் விடுதலைக்காக  மக்கள் கலந்து கொண்டதையிட்டும் பாராட்டும்தெரிவித்து நீதி கிடைக்கும் வரை மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் விடுதலைக்காக  போராட்ட்ங்கள்  நிச்சயம் வெற்றியை பெற்றுத்தருமென கருத்து தெரிவித்தார்..

அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான ஈகை சுடரை திருவாளர்.சாந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட  அர்மேனிய நாட்டு  பிரதி நிதி கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு நடந்த இனப்படுகொலையை அனைத்துலகம் ஏற்று கொள்ள பல வருடங்கள் எடுத்தன எனவும் தமிழினம்  தொடர்ந்து குரல் எழுப்பினால் நிச்சயம் விடுதலை அடையுமெனவும் தனது பட்டறிவை வெளிப்படுத்தியிருந்தார். 
 
இந் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் 1948 இல் இருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும்  தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையே  நீதியை பெற்றுத்தருமென  பிரான்ஸ் அரசாங்கத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும், ஐக்கிய நாடுகள் அவை இடமும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழினப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பற்றகோரியும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எல்லை கடந்த அரச பயங்கரவாத  நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தர்கள்.

 நிகழ்வில் தமிழினப்படுகொலையை உலக நாடுகள் கண்டுகொள்ள வைப்பதுடன்தமிழினப் படுகொலைக்கான அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான அறைகூவலும் விடப்பட்டது . "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.